
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.21, 2016 (21/09/2016)
பங்காபிபூஷண் விருது
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு மேற்கு வங்காள அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான “பங்காபிபூஷண் விருது” வழங்கப்பட்டது.
பெங்காலி பாடல்களில் தனது பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பற்றி:
2011-லிருந்து திரிணாமூல் காங்கிரஸ் அரசு வெவ்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் தலைச்சிறந்த பிரமுகர்களுக்கு பங்காபிபூஷண் விருது வழங்க தொடங்கியது.
இவ்விருதினை முதன்முதலாக டான்ஸ்யூஸ் அமலா சங்கர் (Danseuse Amala Shankar) பெற்றார்.
சர்வேதேச அமைதி நாள்
உலகம் முழுவதும் செப்டம்பர் 21 அன்று சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒரு தற்காலிக போர் நிறுத்தத்திற்கான மனிதாபிமான உதவி மூலம் குறிப்பாக யுத்தம் மற்றும் வன்முறை இல்லாத அணுகலுக்காக இவ்வுலகிற்கு சொல்லும் ஒரு தகவலாக இது சர்வதேச அமைதியை பேண அர்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின்(2016) கரு:
“பேண்தகு அபிவிருத்தி இலக்குகள்: அமைதிக்கான கட்டுமானத் தொகுதிகள்” (“The Sustainable Development Goals: Building Blocks for Peace”)
சர்வேதேச அமைதி நாள் பற்றி:
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இதற்க்கு முன்னர் 1981-இல் இருந்து செப்டெம்பர் 21-யை சர்வதேச அமைதி தினமாக முடிவு செய்துள்ளது.
ரேஸ் கோர்ஸ் சாலையான பிரதமரின் உறைவிடம் லோக் கல்யாண் மார்க் என்று பெயர் மாற்றபட்டுள்ளது
பிரதமரின் உறைவிடமான தில்லியின் பிரபல ரேஸ் கோர்ஸ் சாலையை (RCR) “லோக் கல்யாண் மார்க் (LKM)” என்று பெயர்மாற்றம் செய்ய புது தில்லி கவுன்சில் (NDMC) ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது தில்லியின் ரேஸ் கிளப் பகுதியாக இருந்த ரேஸ் கோர்ஸ்யை, தில்லி ரேஸ் கோர்ஸ் சாலை என பெயரிடப்பட்டு 1940 ல் நிறுவப்பட்டது.
சீனாவில் மிராண்டி புயல்
தென்கிழக்கு சீனாவில் அதிவேக புயல் மிராண்டி தனது வலிமையான காற்று மற்றும் மழை மூலம், அதன் கரையை துவம்சம் செய்துள்ளது.
இது இந்த ஆண்டின் உலகளவில் மிக வலுவான புயல் ஆகும்.
இந்தியாவின் நீண்ட தரை விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (LRSAM)
இந்தியா இஸ்ரேலுடன் இணைந்து உருவாக்கிய தரை விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான (LRSAM), “பாராக் 8” வெற்றிகரமாக ஒடிசா கடலோர பகுதியில் இருந்து சோதனைக்காக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏவுகணை பற்றி:
“பாராக் 8 ஏவுகணை” என்று இஸ்ரேலில் ஹீப்ரு மொழியில் அழைக்கப்படும் இந்த LRSAM, மின்னல் என்று பொருள்படுகிறது.
இரட்டை உந்துவிசை முறை, திட ஒழுங்குமுறை மற்றும் மற்ற பாதுகாப்பான கை வழிமுறைகளைப் பயன்படுத்தி LRSAM க்காக, DRDO பிரத்தியேகமாக இவ்வடிவமைப்பை உருவாகியுள்ளது.
வான்வழி அச்சுறுத்தல்களுக்கு உட்பட்ட ஏவுகணை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் அத்துடன் எந்த வகை ஏவுகணைகளுக்கும் எதிராக போட்டியிட்டு பாதுகாக்க தக்கவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணினியின் கடல் மற்றும் நிலம் சார்ந்த இரண்டு பதிப்புகளும் இந்த ஏவுகணையில் உள்ளன.
செழிப்பான நகரம் – விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள “கஜூவாகா“ (Gajuwaka) சட்டசபை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சபையார் பிரிவுகளின் மத்தியில் செழிப்பான நகரமாக உருவெடுத்துள்ளது.
மறுபுறம், ஸ்ரீகாகுளத்தின் “இச்சபுரம்“ (Ichchapuram) இப்பிரிவில் கீழே உள்ளது.
ஆந்திர அரசு முதன் முறையாக அனைத்து 175 சட்டசபை தொகுதிகளின் தலா வருமானத்தை மதிப்பிடப்பட்டு இவ்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi) – 2016-ம் ஆண்டின் மனிதாபிமான பெண்
ஹார்வர்ட் அறக்கட்டளையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடக்கிய குழு மூலம் மியான்மார் தலைவரான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi) 2016-ம் ஆண்டின் மனிதாபிமான மனிதராக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அவர் 1990 ல் மியான்மரில் ஜனநாயகத்திற்காக தேசிய லீக்–ன் பொது செயலாளராக பணியாற்றியது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi) பற்றி:
சூ கீ, 1989 ஆம் ஆண்டில், நாட்டின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கையில், அவர் வீட்டுக்காவலில் 15 ஆண்டுகள் வைக்கப்பட்டார்.
இப்பொழுது இவர் ஏப்ரல் 2016 இல் மியான்மார் அரசாங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
1991 ஆம் ஆண்டில், அவரது நாட்டின் குடியரசு மற்றும் மனித உரிமைகளுக்காக போராடிய அவரது வன்முறை அல்லாத போராட்டத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உலகப் பொருளாதார சுதந்திர(WORLD’S FREEDOM INDEX) குறியீட்டு அட்டவணை
தனி உரிமைகள் சம்பந்தமான சமூகத்துடன் கனடாவின் ஃப்ரேசர் நிறுவனம் இணைந்த இந்தியாவின் மையம் 2016-ன் உலக பொருளாதார சுதந்திர ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் இந்தியா 10 இடங்கள் பின் தள்ளி 112-வது இடத்தை பிடித்தது.
சீனா, வங்காளம் மற்றும் பாகிஸ்தான் முறையே 113 வது 121 வது மற்றும் 133வது இடங்களுக்கு பின்தங்கியிருந்தது.
WEF பற்றி:
2014-இல் 159 நாடுகளின் கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தை கொண்டு உலக பொருளாதார சுதந்திர குறியீட்டு எண் அளவிடப்படுகிறது.
1 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.21, 2016 (21/09/2016)"