[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil– Nov. 04, 2016 (04/11/2016)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
புகையிலை தடுப்பு பேரவை
முதல் முறையாக, இந்தியாவில், உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் இந்தியா பொருட்காட்சி மார்ட்டில் புகையிலை தடுப்பு பேரவையின் 7வது அமர்வு நவம்பர் 7 முதல் நவம்பர் 12, 2016 வரை நடக்க்க இருக்கிறது.
இந்த மாநாடு பற்றி:
இம் மாநாட்டில், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் தடுப்பு முறைகளை கற்றுக்கொள்ள மற்றும் புகையிலை நுகர்வினை சரிபார்க்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
புகையிலை கட்டுப்பாடு பிரேம்ஒர்க் கன்வென்ஷன் (FCTC) சுகாதாரம் மிக உயர்ந்த தரமான அனைத்து மக்களின் உரிமையை அங்கீகரிக்கும் முதல் உலக ஆதாரம் சார்ந்த பொது சுகாதார உடன்படிக்கையாகும்.
மற்றும் அதன் மூலம் புகையிலை பயன்பாட்டினால் பேரழிவு தரக்கூடிய விளைவுகளுக்கு எதிரான உலகளாவிய போரினை வலுப்படுத்தும்.
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு, நலத்துறை சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரிட்வா அபியான் (Pradhan Mantri Surakshit Matritva Abhiyan)
கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த, “பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரிட்வா அபியான்” திட்டம் சமீபத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நடா (Jagat Prakash Nadda)வினால், புது தில்லியில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு இலவச சுகாதார சோதனை மற்றும் ஒவ்வொரு மாதம் 9ம் தேதி இலவசமாக தேவையான சிகிச்சையும் வழங்கப்படும்.
இத் திட்டம் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பொருந்தும்.
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது
பாலிவுட் நடிகை ரேகாவிற்கு, துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் (DIFF) 13வது பதிப்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்த விழா டிசம்பர் 7-14, 2016 ல் இருந்து நடைபெற உள்ளது.
தலைப்பு : புவியியல்: சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை
ஆசியாவின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட காடு
சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூரில், பிரதமர் நரேந்திர மோடி ஆசியாவிலேயே மிக பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட “ஜங்கிள் சபாரி”-யை தொடக்கி வைத்துள்ளார்.
இது கிட்டத்தட்ட 800 ஏக்கரில் அமைந்துள்ள நந்தன்வன் மிருகக்காட்சி சாலை மற்றும் காட்டின் வேட்டையாடுமிடம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதாவது நினைவுச்சின்னம் மண்டலம், பார்க்கிங் மண்டலம், நிர்வாக மண்டலம், நீர் மண்டலம், காத்திருக்கும் மண்டலம், பூங்கா மண்டலம், சபாரி மண்டலம், மேலாண்மை மண்டலம் ஆகியவை.
சுற்றுசூழல் சீராக்கும் வாகனங்கள் மூலம் காட்டு வாழ்க்கை மற்றும் இயற்கையின் அழகு சிலை துளிகளை பார்வையாளர்களுக்கு சுற்றி காண்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு, நலத்துறை சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு
பஞ்சாப் அரசு 100 தகவல்கள் கல்வி தொடர்பு (ஐஈசி) மொபைல் வேன்கள்களை, முதல்வர் பாதல் மூலம் ‘விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு’ என்ற திட்டத்தின் மூலம் கொடியமர்த்தி துவங்கி வைத்தார்.
இந்த வேன்களின் அடிப்படை நோக்கம் ஹெபடைடிஸ் சி, கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களுக்கு ஆரம்ப கட்டங்களில் இந்த நோய்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க உதவுகிறது.
இந்த திட்டத்தை மேலும் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்துடனும் சிக்கன் குன்யா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பற்றி மக்களுக்கு தெரிவிக்கவும் உதவுகிறது.
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
ஜெர்மன் பசுமைதிறன் விருது
இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர், ஷாமிக் சவுத்ரி(Shamik Chowdhury), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் இளநிலை மாணவர் ஆவார்.
அவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதுமையான பசுமை கருத்துக்களுக்காக ஜெர்மன் பெடரல் அமைச்சகம் 25 அறிஞர்கள் மத்தியில் இவருக்கு இவ்விருதினை வழங்குகிறது.
அவரது ஆராய்ச்சி பற்றி :
அவரது ஆராய்ச்சி நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்டு, 2D கிராபெனின் நானோ தாள்கள்களை பசுமை தொகுப்புகளாக்கும் அடிப்படையை கொண்டு மற்றும் சுய கட்டமைப்பிற்க்காக 3D மேக்ரோ கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டது.
இந்த ஆராய்ச்சி கீழ், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மூலப்பொருளாக கொண்டு பசுமை தொழில்நுட்பங்களை கொண்டு ஒரு நகர வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது.
BMBF பற்றி:
கல்வி மற்றும் ஆராய்ச்சி மத்திய அமைச்சகம் (BMBF), ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் ஒரு காபினெட் தர அமைச்சகமாக உள்ளது.
இந்த அமைச்சகம், ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கும் அணு ஆற்றல் ஒழுங்குபடுத்தும் முறைகளிலும், மற்றும் பொது கல்வி கொள்கையை அறிமுக படுத்துவதற்கும் பயன்படுகிறது.
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
Himawari-9
ஜப்பான் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வானிலை சேவைகளை மேலும் மேம்படுத்த அடுத்த தலைமுறை ஜியோ ஸ்டேஷனரி வளிமண்டலவியல் செயற்கைக்கோளான “Himawari-9”யை விண்ணில் எய்தியுள்ளது.
Himawari-9 (சூரியகாந்தி), ஜப்பானின் ஒன்பதாவது ஜியோ ஸ்டேஷனரி வானிலை செயற்கைகோள் ஆகும். இத்தொடர் செயற்கைகோள்கள் 1977 இல் தொடங்கி விண்ணில் செலுத்தப்படுகிறது.
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil and English on your Inbox.
Read TNPSC current affairs in English and Tamil. Download daily current affairs in English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]