www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs September 09, 2017 (09/09/2017)
தலைப்பு : தினசரி செய்திகள்
டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் பெயரிடப்பட்ட புளுடோவின் மலைகள்
ப்ளூட்டோவில் உள்ள இரண்டு மலைத்தொடர்களுக்கு டென்சிங் நோர்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி ஆகியோரின் பெயர்கள் சர்வதேச வானியல் சங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த கிரகத்தின் முதல் புவியியல் அம்சங்கள் ஜூலை 2015 ஆம் ஆண்டில் நியூ ஹார்ஜான்ஸ் விண்கலம் நெருங்கிய பயணத்தின்போது பெயரிடப்பட்டது.
டென்ஸிங் மோண்டஸ் மற்றும் ஹில்லாரி மோன்டஸ் யார்?
டென்சிங் நோர்கே (1914-1986) மற்றும் சர் எட்மண்ட் ஹிலாரி (1919-2008) ஆகியோரை கௌரவிப்பதற்காக டென்ஸிங் மோண்டஸ் மற்றும் ஹில்லாரி மோன்டேஸ் மலைத்தொடர்கள் பெயரிடப்பட்டுள்ளது.
டென்சிங் நோர்கே என்பவர் இந்திய / நேபாளி ஷெர்பா மற்றும் சர் எட்மண்ட் ஹில்லரி என்பவர் நியூசிலாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் ஆவார்.
இந்த இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று முதன் முதலாக பாதுகாப்பாக திரும்புயவர்கள் ஆவர்.
IAU பற்றி:
சர்வதேச வானியல் சங்கம் (IAU) 1919 இல் நிறுவப்பட்டது.
அதன் நோக்கம் அனைத்துலக ஒத்துழைப்பு மூலம் அனைத்து அம்சங்களிலும் வானியல் விஞ்ஞானத்தை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் ஆகும்.
_
தலைப்பு : தினசரி செய்தி நிகழ்வுகள்
ஜோர்டானில் “சஹாரா வன திட்டம்”
“சஹாரா வன திட்டம்” என்ற புதிய திட்டம் ஜோர்டானில் தொடங்கப்பட்டது.
இது ஜோர்டான் நாட்டின் மணல் குன்றுகளை விவசாய நிலங்களாக மாற்றி சூரியன் மற்றும் கடல் நீர் பயன்படுத்தி உணவு தயாரிக்க நோக்கமாக கொண்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
இதில் சோலார் பேனல்களை பயன்படுத்தி மின்சாரம் வழங்கவும் மேலும் வெளிப்புற நடவு இடம், இரண்டு உப்புநீர் பசுமை வீடுகள், நீர் உப்பு நீக்கும் அமைப்புகள் மற்றும் உப்பு உற்பத்திக்கு உப்பு குளங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றன.
சஹாரா வனத் திட்டம் ஆனது, காலநிலை, மக்கள், மற்றும் வியாபாரங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாடாகவும் நில அமைப்புகளை மீண்டு நல்ல நிலைமைக்கு கொண்டுவருவதாகும்.
_
தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்
உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சோனம் தங்கம் வென்றார்
இந்திய மல்யுத்த வீரர் சோனம் மாலிக், கிரேக்க ஏதென்ஸில் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 56 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் போட்டியிடும் மற்ற இந்தியர்கள் மத்தியில், நீலம் 43kg பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
சோனம் தனது இறுதிப் போட்டியில் ஜப்பானின் சேனா நாகமோட்டோவை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.