• No products in the basket.

7.19 வீரமாமுனிவர்

  • இயற்பெயர் கான்ஸ்டாண்டியஸ் ஜோசப் பெஸ்கி
  • இத்தாலி நாட்டிலுள்ள காஸ்திக்கிரியோனில் கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
  • பிறப்பு 1680 இறப்பு
  • இவர் தமது 30-வது வயதில் தமிழகத்திற்கு வந்தார்.
  • இவரது ஆசிரியர் சுப்பிரதீபக் கவிராயர் ஆவார்.
  • இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம், இத்தாலியம் மற்றும் எபிரேயம் ஆகிய மொழிகளைக் கற்றவராகத் திகழ்ந்தார்.
  • திருச்சி சந்தா சாகிப் என்பவரிடம் திவானாகப் பணிபுரிந்தார்.
  • இவர் தமிழ் அகராதியின் தந்தை எனப்படுகிறார்.

இவரது படைப்புகள் :

  • தமிழின் முதல் அகராதி நூல் சதுரகராதி என்பதே ஆகும். இது சதுர் பிரிவுகளான நான்கினையும் (பெயர், பொருள், தொகை, தொடை) கொண்டுள்ளது.
  • தமிழர்கள் பாராட்டக்கூடிய அளவில் தேம்பாவணி நூலை இயற்றியவர்.
  • திருக்குறளின் முதல் இரு பிரிவுகளான அறம், பொருள் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
  • தமிழ் – இலத்தீன் அகராதி
  • போர்ச்சுக்கல் – தமிழ் அகராதி இரண்டையும் இயற்றியவர்.
  • தொன்னூல் விளக்கம் – ஐந்திலக்கண விளக்க நூலாகும்.
  • இது குட்டித்தொல்காப்பியம் என்று பாராட்டப்படுகிறது.
  • பரமார்த்த குருகதை என்பது தமிழின் முதல் ஏளன நூலாகும்.
  • வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம் என்ற உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.
  • கொடுந்தமிழ் இலக்கணம் என்ற பேச்சுத்தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார்.
  • கித்தேரியம்மன் அம்மானை, திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல நாயகி அம்மானை, கருணாம்பாப் பதிகம், அன்னை அழுங்கல் அந்தாதி என்ற சிற்றிலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்.

நுழையும்முன் : பசுந்தங்கம், புதுவெள்ளி, மாணிக்கம், மணிவைரம் யாவும் ஒரு தாய்க்கு ஈடில்லை என்கிறார் ஒரு கவிஞர். தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து தனித்துறும் துயரம் பெரிது. மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் பெருகும்; துயரைப் பகிர்ந்தால் குறையும்; சுவரோடாயினும் சொல்லி அழு என்பார்களல்லவா? துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள்! சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனிதம் இருந்தால் எத்தனை ஆறுதல்!.

முன்நிகழ்வு : கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார். கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

  1. பூக்கையைக் குவித்துப் பூவே

புரிவொடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருந்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கிப் பூவோடு

அழுங்கணீர் பொழிந்தான் மீதே. 2388

சொல்லும் பொருளும்

சேக்கை – படுக்கை

யாக்கை – உடல்

பிணித்து – கட்டி

வாய்ந்த – பயனுள்ள

  1. வாய்மணி யாகக் கூறும்

வாய்மையே மழைநீ ராகித்

தாய்மணி யாக மார்பில்

தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

தூய்மணி யாகத் தூவும்

துளியிலது இளங்கூழ் வாடிக்

காய்மணி யாகு முன்னர்க்

காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ. 2400

சொல்லும் பொருளும்

இளங்கூழ் – இளம்பயிர்

தயங்கி – அசைந்து

காய்ந்தேன் – வருந்தினேன்

  1. விரிந்தன கொம்பில் கொய்த

வீயென உள்ளம் வாட

எரிந்தன நுதிநச்சு அம்புண்டு

இரும்புழைப் புண்போல் நோகப்

பிரிந்தன புள்ளின் கானில்

பெரிதழுது இரங்கித் தேம்பச்

சரிந்தன அசும்பில் செல்லும்

தடவிலா தனித்தேன் அந்தோ! 2401

சொல்லும் பொருளும்

கொம்பு – கிளை

புழை – துளை

கான் – காடு

தேம்ப – வாட

அசும்பு – நிலம்

  1. உய்முறை அறியேன்; ஓர்ந்த

சொல்லும் பொருளும்

உய்முறை – வாழும் வழி

ஓர்ந்து – நினைத்து

கடிந்து – விலக்கி

உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன்; கானில்

செல்வழி அறியேன்; தாய்தன்

கைமுறை அறிந்தேன் தாயும்

கடிந்தெனைத் தனித்துப் போனாள். 2403

சொல்லும் பொருளும்

உய்முறை – வாழும் வழி

ஓர்ந்து – நினைத்து

கடிந்து – விலக்கி

  1. *நவமணி வடக்க யில்போல்

சொல்லும் பொருளும்

உவமணி – மணமலர்

படலை – மாலை

துணர் – மலர்கள்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே. *2410

சொல்லும் பொருளும்

உவமணி – மணமலர்

படலை – மாலை

துணர் – மலர்கள்

இஸ்மத் சன்னியாசி -தூய துறவி : வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார். இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார். இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.

நூல் வெளி : தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது. கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது. இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி. இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.